யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்
Jaffna Municipal Council
Launch
official website
By Vanan
யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் நேற்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ். மாநகர முதல்வர், மாநகர ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது.
இணையத்தள அங்குராரபண நிகழ்வில் யாழ். மாநகர சபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ். மாநகரசபையின் இணையதளத்தில் யாழ். மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும், சேவைகளையும் பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.