காவல்துறை மற்றும் முப்படைத் தலைவர்களைச் சந்தித்த செந்தில் தொண்டமான்..!
கிழக்கு மாகாண காவல்துறை மற்றும் முப்படைத் தலைவர்களைச் சந்தித்து சட்டம் மற்றும் பிற விடயங்கள் குறித்து செந்தில் தொண்டமான் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், நான் கிழக்கு மாகாண காவல்துறை மற்றும் முப்படைத் தலைவர்களைச் சந்தித்து சட்டம் மற்றும் பிற விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.
மாகாணத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தொடர்பாக திரு.தமயந்த விஜேசிறி, அம்பாறை பிரதிப் காவல்துறை மா அதிபர் திரு. உஜித் லியனகே, மட்டக்களப்பு பிரதிப் காவல்துறை மா அதிபர் திரு. லயனல் குணதிலக்க - திருகோணமலை DIG, திரு. அமல் எதிரிசிங்க , SSP மட்டக்களப்பு, திரு. ஜயந்த ரத்நாயக்க SSP அம்பாறை, திரு. பிரசன்ன பிரக்மனகே SSP திருகோணமலை, இராணுவ பிரிகேடியர் சாலிய டயஸ் படையணியின் கட்டளைத் தளபதி கிழக்கு, திரு.திரு.மஹேஷ் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.











