வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள் தளர்த்தப்படும் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
Kandy
Ranil Wickremesinghe
Tourism
Central Province
By Shalini Balachandran
வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கண்டி (Kandy) மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை
இந்தநிலையில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்