எரிவாயு விநியோகத்தில் தடை: லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்
நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த வழக்கானது இன்று (29.10.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிறுவனத்துக்கு அழைப்பாணை
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, நிறுவனத்துக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 86ஆம் பிரிவை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |