உயர் நீதிமன்றை அவமதித்த சட்டத்தரணி :சட்ட நடைமுறைகளுக்கு எதிராக தடை விதிப்பு
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Crime
By Laksi
உயர் நீதிமன்றத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக சமர்ப்பணங்களை முன்வைத்ததாகவும் ஒழுங்கற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
இந்நிலையில்,இந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை அவருக்கு சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி