ஆணைக்குழு நியமனத்தை தாமதப்படுத்துவது யார்..சிறப்புரிமைக் குழுவில் விசாரணை - சஜித் அதிரடி
கேள்வி
ஆணைக்குழு நியமனத்தை தாமதப்படுத்துவது யார்..? அரசாங்க ஊடகமொன்றில் பதிவான "பொய்யான" செய்தி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் அரசாங்க பத்திரிகையொன்றின் முதற்பக்கத்தில் “எதிர்க்கட்சித் தலைவரின் இழுத்தடிப்பால் சுயாதீன ஆணைக்குழு தாமதம்” என வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும்,இந்தச் செய்தியை வெளியிட்டமை குறித்து உரிய தரப்பை சிறப்புரிமைக் குழுவிற்கு அழைத்து கேள்வி எழுப்புமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
சுதந்திரமான மற்றும் சுயாதீன ஊடகங்களை தாம் எப்போதும் மதிப்பதாகவும், நிபந்தனையின்றி ஊடக சுதந்திரத்திற்காக முன் நிற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கத்தின் பொய்யான ஊடகச் செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது தொடர்பில் இரண்டு அமர்வுகள் இடம்பெற்றதாகவும்,குறித்த இரு அமர்வுகளிலும் நல்லெண்ணத்துடன் தாம் பங்கேற்றதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வாறான நிலையில்,சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது தாமதமாவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் காரணமா என சபாநாயகரிடம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகரிடமிருந்தும் விளக்கம்..!
இது தொடர்பில் சபாநாயகர் விளக்கமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்ததோடு,
இந்நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எந்த தாமதமும் தடையும் இல்லை என்றும் சபாநாயகர் விளக்கமளித்தார்.
