போதகர் ஜெரோமுக்காக களமிறங்கவுள்ள முன்னணி சட்டத்தரணிகள்
பௌத்தம் மற்றும் பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் உரையை ஆற்றிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள போதகரும் அவரது ஊழியர்களும் இந்தப் பணியைத் தயார் செய்து வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிணை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் சட்டத்தரணிகள் குழு

இதன்படி கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த சட்டத்தரணிகள் குழு பிணை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவுள்ளது.