பூமிக்கு ஏற்படவுள்ள பாரிய அழிவு - 2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் நிச்சயம்!
விண்வெளியில் உள்ள சிறுகோள் ஒன்று பூமியுடன் மோதவுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் சராசரியாக 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2046 ஆம் ஆண்டு, 165 அடி கொண்ட 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், பூமியுடன் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் எச்சரிக்கை

அதற்கமைய கடந்த 28 ஆம் திகதி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே 2046, பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று மாலை 4:44 மணிக்கு இந்த தாக்கம் ஏற்படுவதற்கான ஏதுக்கள் உள்ளன என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுகோள், பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் எனவும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூமியைத் தாக்கவுள்ள கோள்

எனினும் அந்த சிறுகோள் பூமியில் எங்கு விழும் என்பது இன்னும் தெரியவில்லை. கணிக்கப்பட்ட தாக்க மண்டலங்கள், இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் மேற்கிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழவுள்ள சம்பவத்தை 114 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் மோதிய துங்குஸ்கா 12-மெகாடன் நிகழ்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.