அரச ஊழியர்களின் விடுமுறை குறைப்பு : வெடிக்கவுள்ள போராட்டம்
Colombo
Government Employee
Government Of Sri Lanka
By Sumithiran
அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45ல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு நிதியமைச்சிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்தார்.
விடுமுறை என்பது சலுகை
அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை என்பது சலுகை என்று தெரிவித்த அவர், எவ்வித விசாரணையும் இன்றி விடுமுறையைக் குறைக்க முன்வருவது மக்களின் பணி உரிமையை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் கடுமையான தொழில்முறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்