அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒருமாத கால விடுமுறை
school
leave
a/l exam
By Vanan
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் (அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார்) அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஆரம்ப வகுப்புக்களை தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இதன்படி, தற்போது அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

