அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை
sri lanka
school
leave
By Vanan
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை(07) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் மார்ச் மாதம் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி மார்ச் மாதம் 5ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
