சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி -வெளிநாடு பறக்கத் தயாராகும் மக்கள்
srilanka
people
abroad
crisis
By Sumithiran
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பது மேலும் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை அண்மைக் காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு செல்ல பணத்தை புரட்டுவதற்காக சொத்துக்களை மக்கள் விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.
அதேவேளை சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி