மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை!

Mannar Sri Lanka Fisherman
By Independent Writer Oct 15, 2026 05:59 PM GMT
Report
Courtesy: nayan

 மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் காணப்பட்ட வலைகளும் அகற்றப்பட்டுள்ளன.

மன்னார் ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில கடற்றொழிலாளர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

நகரசபையால் பலமுறை எச்சரிக்கை

குறித்த செயற்பாட்டைக் கைவிடுமாறு நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் வலைகளை உலர விடுகின்றனர்.

மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை! | Legal Action Against Dry Fishing Nets Roads Mannar

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும்போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வியெழுப்பி, தமது செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்முறையாக யாழ்ப்பாணத்தவரின் 07 கோடி ரூபா பெறுமதியான சொத்து பறிமுதல்

முதன்முறையாக யாழ்ப்பாணத்தவரின் 07 கோடி ரூபா பெறுமதியான சொத்து பறிமுதல்

வீதிகள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான பொது இடங்களாகும்

ஆனால், தமது தொழில் தேவைகளைக் காரணம் காட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என பாதிக்கப்படும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். வீதிகள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான பொது இடங்களாகும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் என பொது மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்

மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை! | Legal Action Against Dry Fishing Nets Roads Mannar

இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும் தொடர்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன. கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீதிகளில் காணப்படும் வலைகள் அகற்றப்பட்டு அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026