அரசாங்கத்தின் அதிகபட்ச விலையை மீறி அரிசி விற்பனை செய்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் இன்று(10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதிக விலையில் விற்பனை
எனவே, வணிக சமூகம், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்கள் அரிசியின் அளவை நாங்கள் பகிரங்கப்படுத்திய விலைக்கு ஏற்ப வாங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலையில் விற்பனை செய்யப்படுமாயின், அவர்கள் அதைப் பற்றி முறைப்பாடு செய்யலாம்.
அதன்படி, நுகர்வோர் அதிகாரசபையின் 1977 என்ற இலக்கத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |