குற்றம் சுமத்தப்பட்ட 50 சுங்க அதிகாரிகள்: தொக்கி நிற்கும் சட்ட நடவடிக்கை!
முறையாக ஆய்வு செய்யாமல் பொருட்களை விடுவித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சுமத்தப்பட்ட சுமார் 50 சுங்க அதிகாரிகள் மீது எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.
608 அறிவிக்கப்படாத மற்றும் குறைவாக அறிவிக்கப்பட்ட வாகன உதிரி பாகங்கள் , இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் உரிமங்கள் தேவைப்படும் 122 "பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்" மற்றும் 18 சக்கரங்கள் கொண்ட ஒரு கொள்கலன் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் விடுவித்ததற்காக நிறுவனக் குறியீட்டின் கீழ் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இதேவேளை, ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்ட சிகரட்டுகளை பறிமுதல் செய்து சுமார் ஆறு மில்லியன் ரூபாய்க்கு ஏலம் எடுத்தபோது, இறக்குமதியாளர் வழக்குத் தொடர்ந்த பிறகு சுங்கத்துறை குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு சுமார் ஏழு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், நிறுவனக் குறியீட்டின்படி இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் தணிக்கை அலுவலகம், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |