பதிவு செய்யாத வைத்தியர்களுக்கு எதிராக வருகிறது பேரிடி!
இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யாத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, இன்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ முறை
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இலங்கையில் பல மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த மருத்துவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சில மருத்துவ சபைகளில் இந்தப் பதிவில் சிக்கல்கள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட மருத்துவ முறைகளைத் தவிர மாற்று மருத்துவ முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
சட்ட நடவடிக்கை
சில போலி டாக்டர்கள் இருக்கிறார்கள். இது தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
பதிவு செய்யாத மருத்துவர்கள் இருந்தால் தெரிவிக்கவும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க தயார்." என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |