மீறினால் பாயப்போகும் சட்டம் : மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
Excise Department of Sri Lanka
By Sumithiran
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (14)வரை மூடப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் திறக்கப்படும் மதுபானசாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை தடுக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
இதன்படி, நேற்று வரை 1,320 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி