நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டமூலம்: நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் இயங்கி வரும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சில நுண் நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை நிறுவுவதன் மூலம் அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டமூலங்கள்
அத்தோடு, நீதித்துறை செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் வினைத்திறனாக்கும் வகையில் எட்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |