மகிந்தவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நாமலிடம் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் நாமலுக்கும், குட்டியாராச்சிக்கும் சொல்ல வேண்டியது மகிந்த ராஜபக்சவை தனியாக நிம்மதியாக இருக்க விடுங்கள் என்பதுதான் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மகிந்த ஜெயசிங்க தெரிவிக்கையில்,
அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு
'முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தனது அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மேலும் சமூகத்தில் பலர் அவர் தனது காலத்தில் செய்த பல்வேறு விடயங்களைப் பற்றிக் கூறி அவரை அவமதித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை நாட்டில் ஏராளமான மக்கள் அவரது காலத்தில் செய்த தவறுகளை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்
இதன்படி கடந்த காலத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததால், மகிந்தவின் குணாதிசயத்தின் மீது மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மரியாதை கொண்டுள்ளனர்.
அவர் மிகவும் வயதானவர், இப்போது அவர் சுதந்திரமாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை உங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
