முழு பலத்துடன் தாக்குதல் நடத்துவோம்! மிரட்டும் இஸ்ரேல் பிரதமர்
காசா முனையில் ஹமாஸ் மீது முழு பலத்துடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர்.
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 192 பேர உயிரிழந்துள்ளனர். இந்த மோதலை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கும் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில்,
காசாவில் உள்ள ஹமாஸ் மீது முழு பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்புபடை தாக்குதலை தொடரும். இதற்கு நேரம் எடுக்கும். காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்க விரும்புகிறது குறிப்பிட்டார்.