நெதன்யாகுவை துரத்தி கொலை செய்வோம்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை "முழு சக்தியுடன் துரத்தி கொலை செய்வோம்" என்று பகிரங்க அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக குறிவைத்து கொலை அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது.
IRGC-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
முழு சக்தி தாக்குதல்
"இந்த குழந்தைக் கொலைகார குற்றவாளி உயிருடன் இருந்தால், அவரை முழு சக்தியுடன் துரத்தி கொலை செய்வதைத் தொடர்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஈரானின் அரசு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த அச்சுறுத்தல், சமூக ஊடகங்களில் நெதன்யாகு கொல்லப்பட்டார் அல்லது காணாமல் போனார் என்ற வதந்திகள் பரவிய பின்னணியில் குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.
அத்தகைய வதந்திகளை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் "பொய்யான செய்தி" (fake news) என்று மறுத்து, நெதன்யாகு நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |