நெருக்கடியை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர்
prime minister
mahinda rajabaksha
srilankan economic crisis
new year message
By Kanna
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் முகங்கொடுத்து வரும் துன்பங்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.“ என பிரதமர் தனது புத்தாண்டு வாழ்த்தை மக்களுக்கு வழங்கியிருந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி