உறுதுணையாக இருப்போம் - இந்தியாவிலிருந்து கிடைத்த ஆதரவு
Dr. S. Jaishankar
Sri Lanka
India
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றும் கூறினார்.
அடுத்த நடவடிக்கை
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருவதாகவும் அடுத்த நடவடிக்கை தொடர்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
“நாங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறோம், உதவி செய்ய முயல்கிறோம், எப்பொழுதும் உதவி செய்து வருகிறோம்” என அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
