சர்ச்சையான ஜனாதிபதியின் மேடைப்பேச்சு: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
புதிய இணைப்பு
தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அந்தச் செய்தி தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று ஒரு உள்ளூர் செய்தித்தாளின் தலைப்புச் செய்தி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அரசாங்க தகவல் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியதாக முன்னர் வெளியான செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை நாட்டில் அரசியல் மற்றும் சட்ட விவாதங்களை தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடு
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்பகிறது.
ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் தேசிய மக்கள் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகாரத்தை வைத்திருக்காத நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசியல் மேடைகளில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு முக்கிய பிரிவுகள்
இதன்படி, குறித்த அறிக்கையால் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் படி, ஜனாதிபதியின் அறிக்கை உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை மீறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Anura Kumara Dissanayake Visit Jaffna - LIVE 🛑
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
