மோடிக்கான கடிதம் - கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது

Sri Lanka Narendra Modi India
By Vanan Jul 12, 2023 05:48 PM GMT
Report

இந்தியாவிடம் கோரவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் பகிரங்கமானது அல்லவென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் முரண்படும் விடயங்கள் குறித்து எதுவும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்திற்கு முன்னராக நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்புவது தொடர்பாகவும் இந்திய உயர்ஸ்தானிகருடன் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கடிதத்தை உரிய நேரத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

கடிதத்தின் இறுதி வடிவம்

மோடிக்கான கடிதம் - கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது | Letter To Pm Modi Tna

மோடிக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் சில திருத்தங்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி இந்தக் கடிதத்தின் இறுதி வடிவம் தயாரிக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயம் மற்றும் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு தலைவர்கள் சந்திக்கும் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்துமாறு கோருவது பொருத்தமற்றது என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அணுகல்முறையின் அடிப்படையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பு இருந்தது எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் சிறிலங்கா தலைவர்களுக்கு இடையிலான பேச்சின் போது எவ்வாறான விடயங்கள் இடம்பெற வேண்டும் என்ற விடயத்தை, கவனமான அணுகுமுறையுடனேயே முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிடம் அரசியல் தீர்வு

மோடிக்கான கடிதம் - கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது | Letter To Pm Modi Tna

இதேவேளை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம் இந்தியாவிடம் கோர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிகே உள்ளது எனவும் அதனை நாம் மீற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரா.சம்பந்தனுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தாண்டி - கூட்டுறவு சமஷ்டி தொடர்பாக இந்தியாவே பிரஸ்தாபித்துள்ளது எனவும், இவ்வாறு இருக்கும் போது 13ஆவது திருத்தத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மக்கள் ஆணையுள்ள தாம் கோர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகள் எவ்வாறு வேண்டுமானாலும் செயற்படலாம் என்ற போதிலும், மக்கள் ஆணையுள்ள தாம் அவ்வாறு செயற்பட முடியாது என்று திட்டவட்டமாக சம்பந்தன் குறிப்பிட்டார் என எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025