புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு

Tamils Shanakiyan Rasamanickam Sri Lanka Economic Crisis Norway Sri Lanka Fuel Crisis
By Vanan Jun 30, 2022 12:54 PM GMT
Report

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையர்களுக்கு விடிவு கிடைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நோர்வேயில் வைத்து தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த அல்லது வெளியேற்றப்பட்ட புலம்பெயர் இலங்கையர்களை நோர்வேயில் சந்திக்கிறேன்.

மனித உரிமை மீறல்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு | Liberation For Sri Lankans By Diaspora Tamils

கடந்த இரு வாரங்களில் சுவிஸ்லாந்தில் லீடிங் வித் பாஸ் என்ற தலைப்பில் கடந்த காலங்களை எவ்வாறு முகம் கொடுப்பது, யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நாடு என்ற ரீதியில் எவ்வாறு முகம் கொடுப்பது. இதிலிருந்து எவ்வாறு வெளியேவருவது, முன்னேறி செல்வது தொடர்பில் அவதானம் செலுத்த சுவிஷ்லாந்து நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டேன்.

சுவிஸ்லாந்துக்கு அண்மைய நாடாக நோர்வே உள்ளதால் இங்கு வந்துள்ளேன். வருகை தந்துள்ள அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விசேடமாக தற்போது இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு | Liberation For Sri Lankans By Diaspora Tamils

அதிகாரிகளும் பொது மக்களும், காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொள்கிறார்கள். ஊழல் மோசடி, இலஞ்சம் ஆகியவை தற்போதைய நிலைமைக்கு காரணம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

இல்லை நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமலிருப்பது தற்போதைய பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது.

1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழ், முஸ்லிம், சிங்களம் என இலங்கையர்கள் வேறுப்படுத்தப்படுத்தப்பட்டதால் தான் தற்போதைய பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட காரணத்தினால் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து 30 வருடகால சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது. கடன் பெற்று யுத்தத்திற்கு அதிக நிதி செலவிடப்பட்டது. 2009ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக கோட்டா கோ ஹோம், நோ டீல் கம எனக் குறிப்பிட நேரிட்டுள்ளது. அரச தலைவர் கோட்டபய ராஜபக்ஷவிற்கும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் இருக்கிறார்கள்.

பிளவுப்படாத இலங்கைக்குள் தீர்வினை கோருகிறோம்

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு | Liberation For Sri Lankans By Diaspora Tamils

73 வருடகால தீர்க்கப்படாத தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் உலகளாவிய ரீதியில் உள்ள 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்.

அரச தலைவர், பிரதமர் பதவி விலக வேண்டும், பதவி விலகாவிடின் குறைந்தபட்சம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது. இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளமையினை காண்கையில் வேதனையடைகிறோம்.

அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு மக்களின் நிலை தொடர்பில் அக்கறையில்லை. இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முடியும்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடத்திலும் செல்வாக்கு செலுத்தும்.

அரச தலைவர், பிரதமர் பதவி விலக வேண்டும். பதவி விலகாவிடின் குறைந்தபட்சம் தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிளவுப்படாத இலங்கைக்குள் தீர்வினையே கோருகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026