பேன் தொல்லை பற்றிய கவலையா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
Hair Growth
By pavan
3 வாரங்கள் முன்
பேன் தொல்லை
நம்மில் பலருக்கு எரிச்சலை கொடுக்கின்ற பிரச்சினைகளில் ஒன்று பேன் தொல்லை.
தலையில் இருக்கும் இந்த பேன்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளுகின்ற அதேவேளை மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே முட்டையிடுகின்றன.
இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈர், பேன் தொல்லை குறையும்.
- துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.
- வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.
- உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பேன் தொல்லை குறையும்.
- வேப்பிலைத் தூள் - அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், பயத்தமாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரைக் கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசிக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
