மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி - அமெரிக்க சுகாதாரத் தரப்பு எடுத்த முடிவு
America
Corona
Vaccine
People
By Chanakyan
நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு உள்ளவர்களுக்கு மேலதிகமாக மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினால் மாற்று சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவலுக்கு எதிராக மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
சில நாடுகளில் மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி