ஊடகவியலாளர் கொலை : குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை
கடந்த 2008ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஊடகவியலாளரான சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ஐந்தாவது குற்றவாளிக்கு 03 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
ஐவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை
ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காரில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு
2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி இந்தக் கொலை நடந்தது. 25 வயதான பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் அன்றைய தினம் பரபரப்பான செய்தியை ஒளிபரப்புவதற்காக தனது ஊடக நிறுவனத்தில் இரவு தங்கியிருந்து அதிகாலை 3 மணியளவில் தனது காரில் சென்றுள்ளார்.
அப்போது, அவர் தனியாக காரில் செல்வதைக் கண்ட குற்றவாளிகள் கும்பல், அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து காரை ஓட்டியதால், குற்றவாளிகள் குழு அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
