விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை

Rajiv Gandhi Sri Lanka Indian Army Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Apr 05, 2024 08:36 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையிலான மிக மும்முரமான யுத்தம் 1987ம் வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பமானது.

இந்திய -புலிகள் யுத்தத்தின் பல விடயங்களை ஏற்கனவே நாங்கள் இந்தத் தொடரின் முதல் 50 அத்தியாயங்களிலும் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.

யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளான சில தமிழ்க் குழுவினராலும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் நிறைவே பார்த்திருந்தோம்.

இந்திய இராணுவம் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் பார்த்திருந்தோம்.

ஈழத்தமிழர்களைக் காக்கவென தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த அகதி முகாம்களையும், வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், மதஸ்தலங்களையும் எப்படி எப்படியெல்லாம் தாக்கியழித்து கோரதாண்டவம் ஆடியிருந்தது என்கின்ற வரலாறுகளைத் திகதிவாரியாக இந்தத் தொடரில்;பதிவிட்டிருந்தோம்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சண்டைகள், கிழக்கில் முஸ்லிம்கள் மீது இந்தியப்படையினர் நிகழ்த்திய தாக்குதல்கள் என்றும் பல விடயங்களையும் முன்னய சில அத்தியாயங்களில் பார்த்திருந்தோம். இந்திய-புலிகள் யுத்தத்தின் அந்த அத்தியாயங்களைப் பார்க்கத்தவறியவர்கள் கண்டிப்பாக அவற்றைப் படித்துவிட்டு இந்தத் தொடரின் இனிவரும் அந்தியாயங்களைப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

 இனி இந்திய -புலிகள் யுத்தத்தின் மேலும் சில முக்கிய கட்டங்கள் பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்போம்.

கனரகப் பிரிவுகள்

பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள்.

புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள்.

யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது.

விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை | Life In Hiding Of Ltte Leaders

இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்கபட்டிருந்தன. இந்தியப் படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம் போன்றவர்கள் இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள்.

அவர்களின் கூற்றுப்படி, 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள்.

கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோணமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன.

இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.

இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகணங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நூற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள், பீ-40 ரன ஏவுகளைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன.

இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இரண்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.

புலிகளின் முக்கியஸ்தர்கள்

இந்தியப் படையினர் மிகப் பெரிய பலத்துடன் வடக்கு கிழக்கை ஓரளவு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். சந்திக்கு சந்தி முகாம் அமைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தார்கள்.

சாதாரண மக்கள் புலிகளுக்கு உதவிவிட்டு இலகுவில் தப்பித்துவிட் முடியாத அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டிருந்தார்கள். மக்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்தியிருந்த கொடூரங்களின் வெளிப்பாடாக அது அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட புலிகளின் முக்கிய அணிகள் வன்னிக்கு தமது தளங்களை இடம்மாற்றிக்கொண்டன. வன்னிக் காடுகளில் மறைந்திருந்து தமது போராட்டத்தைத் நெறிப்படுத்துவதே அப்போதைக்கு சிறந்த ஒரு ராஜதந்திரமாக இருந்தது.

இதேநேரத்தில் யாழ்குடாவில் சிறுசிறு அணிகளாகப் பிரிந்து நின்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருக்கு எதிராக கொரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்தபடி இருந்தார்கள்.

விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை | Life In Hiding Of Ltte Leaders

வன்னியில் இருந்து அவர்களுக்கு உத்தரவுகளும், வழங்கல்களும் கிடைத்தபடி இருந்தன. இந்த கால கட்டம் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மிகவும் இக்கட்டானதும், கஷ்டமானதுமான காலகட்டம் என்றுதான் கூறவேண்டும்.

யாழ் குடா முழுவதும் விதைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர் வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுக்கு உதவ ஓடித்திரிந்த தமிழ் கூலிப் படைகள் அச்சத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் – இவைகளுக்கு நடுவில் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் மிகவும் கஷ்டத்துடன்தான் மேற்கொண்டு வந்தார்கள்.

இப்படியான கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். துரத்தி வரும் இந்தியப் படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது, அவ்வாறு பாதுகாத்தபடி எதிரியைத் திருப்பித் தாக்குவது என்பன அக்காலகட்டத்தில் மிகமிக கஷ்டமாக இருந்தது.

புலிகளின் தலைவர்

பிற் காலத்தில் உலகிற்கு நன்கு அறிமுகமான விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான சங்கடங்களை எதிர்கொண்டார்கள், எப்படியான ஆபத்துக்களைச் சந்தித்தார்கள், அவற்றில் இருந்து எப்படித் தப்பித்தார்கள் என்று அடுத்த சில அத்தியாயங்களில் மேலேராட்டமாகப் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை | Life In Hiding Of Ltte Leaders

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காயம் அடைந்து, அந்தக் காயம் சீழ் பிடித்த நிலையில் இந்தியப் படையினரிடம் இருந்து அவரைக் காப்பாற்ற போராளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம்  இந்தியப் படையினரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக கரவெட்டி, நவின்டில், நெல்லியடி என்று தப்பி ஓடிய கதை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன் அக்காலத்தில் தென்மாராட்சியின் பிராந்தியத் தளபதியாக கடமையாற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் புலிகளின் மூத்த உறுப்பினரான பாலகுமார், காவல்துறைப் பொறுப்பாளர் (பின்னர் அரசியல்துறைப் பொறுப்பாளர்)நடேசன், நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி, கடற்புலிகளின் தளபதி சூசை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் ரமேஷ், போன்றவர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான கஷ்டங்களை அனுபவித்தார்கள், எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள் என்பன பற்றி எதிர்வரும் வாரங்களில் பார்க்க இருக்கின்றோம்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்  வன்னி அலம்பில் காடுகளில் அனுபவித்த கஷ்டங்கள், பிரபாகரனைக் குறிவைத்து இந்தியப்படையினர் ஆப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul’ ) ஆப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’) ஆப்பரேசன் செக்மேட். (Operation Check-mate) என்ற பெயர்களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றியும், அந்த இராணுவ நடவடிக்கையில் இருந்து புலிகளின் தலைவர் எவ்வாறு தன்னையும் தன்னுடன் இருந்த போராளிகளையும் காப்பாற்றினார் என்ற வீர வரலாற்றையும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024