யாழ்ப்பாணத்தில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சூத்திரதாரி கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம்(jaffna) வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் ஒருவரை இன்றையதினம் (30)வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேரடியாக சென்று கைது
வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம்(01) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்