தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் - தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மறைமுக நடவடிக்கை!
நாடு முழுவதும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தேர்தல் பணிகளுக்கு இடையூறை விளைவிக்கும் வகையில் இரண்டு தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்
குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்கள் சுதந்திரமாக தமது பணியினை மேற்கொள்ள உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்களை காரணம் கூறுவதன் மூலம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
