வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : பாதிக்கப்பட்ட தரப்பு குற்றச்சாட்டு
இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை உள்நாட்டு உந்துருளி உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.
அத்துடன் நிதியமைச்சின் சில அதிகாரிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன Samantha jayawardanaசுட்டிக்காட்டியுள்ளார்.
உந்துருளி உதிரிபாகங்கள்
மேலும் உந்துருளிக்கு தேவையான இயந்திரம், மின்குமிழ்கள், மீற்றர்மானி உள்ளிட்ட ஏனைய உதிரிபாகங்கள் அனைத்தும் நாட்டில் தயாரிக்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தங்களது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகின்றதுடன் தற்போது உதிரிபாகங்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறான தருணத்தில் வாகன இறக்குமதி கட்டுபாட்டை தளர்த்தியமை மற்றும் வரியை அதிகரித்தமை காரணமாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |