ஒரே நேரத்தில் பல மாடுகள் பலி - வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
Accident
By pavan
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மேய்சலில் ஈடுபட்ட மாடுகள் பலியாகியுள்ளன.
இச் சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.
இடி மின்னல் தாக்கம்
இதன்போது, அந்த பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.
இந்நிலையில், வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி