அனுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு
Anuradhapura
Death
Weather
Lightning Alert
By Sindu
அனுராதபுரம் - நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் வயல் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தபோது மழை பெய்துள்ளது.
இதன்போது பாதுகாப்பிற்காக அருகில் இருந்த மரமொன்றின் கீழ் நின்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே உயிரிழப்பு
மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூவரும் உடனடியாக ரம்பேவ பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் 61 மற்றும் 26 வயதுடைய இரு பெண்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி