பாலைவனமாகிறதா யாழ்ப்பாணம்...! நடக்கும் சுண்ணக்கல் அகழ்வு : தவறிழைத்த எம்.பிக்கள்
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்படும் போது எமது பிரதேசத்திற்கு ஏற்ற மாதிரி சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய முக்கிய கடமையாகும் என ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய தவறிழைத்திருக்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ''யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல்லில் இருந்து உருவாக்கப்படும் கிளிங்கரை தயாரிப்பதற்கான அனுமதி எடுத்தமை பற்றி யாருக்கும் தெரியாது.
கிளிங்கரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து சீமெந்தை தயாரிப்பதற்கான அனுமதி மட்டும் தான் வழங்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியிருந்தது.
வெளிநாட்டில் இருந்து கிளிங்கரை இறக்குமதி செய்து சீமெந்து உற்பத்தி செய்யலாமே தவிர எமது நாட்டில் கடலுக்கு அருகில் இருக்கின்ற சுண்ணக்கல்லை எடுத்து ஒரு சின்ன தீவில் உள்ள இடங்களில் சீமெந்து தயாரிக்க தேவயைில்லை.” என அவர் தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |