யாழிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் : மக்கள் விசனம்

Jaffna Trincomalee Douglas Devananda S Shritharan National People's Power - NPP
By Sathangani Dec 31, 2024 11:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (JAffna) இருந்து சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலேயே சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், ”தென்மராட்சியில் குறிப்பாக, மந்துவில், வேம்பிராய் பகுதிகளில் தனியார் ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி, தனது காணிக்குள் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கொழும்பு - டுபாய் இடையான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்

கொழும்பு - டுபாய் இடையான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்

 சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை அவரிடம் வாங்கி அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.

குறித்த தனிநபர்களின் செயற்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன. தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது, அரச காணிகளிலும் தமது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர்.

யாழிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் : மக்கள் விசனம் | Limestone Transported From Jaffna To Trincomalee

யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நன்னீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால், நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தேர்தலில் பெற்ற பலத்த அடியின் எதிரொலி : பெண்கள் - இளைஞர்களுக்கு அழைப்பு விடும் தமிழரசு தலைமை

தேர்தலில் பெற்ற பலத்த அடியின் எதிரொலி : பெண்கள் - இளைஞர்களுக்கு அழைப்பு விடும் தமிழரசு தலைமை

நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்த நிலையில், கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், "சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3 மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது" என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் (S. Shritharan) குற்றம் சாட்டி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

யாழிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் : மக்கள் விசனம் | Limestone Transported From Jaffna To Trincomalee

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் குறித்த பகுதிகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அகழ்வு பணிகளை இடைநிறுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

ஆனாலும் இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால், தமது பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

புலோலி, யாழ்ப்பாணம், சென்னை, India, London, United Kingdom, San Diego, United States

23 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
மரண அறிவித்தல்

Urumpirai, திருகோணமலை, கொழும்பு, Palermo, Italy, Ilford, United Kingdom

22 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020