கால்பந்து உலகில் வரலாறு படைத்த மெஸ்ஸி
கால்பந்தாட்ட வரலாற்றில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) புதிய சாதனையை படைத்துள்ளார்.
அந்தவகையில், கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.
அதிக கோல்கள்
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) பார்சிலோனா கிளப்பில் தான் அதிக கோல்கள் அடித்துள்ளார்.

மெஸ்ஸியின் கோல்கள் பங்களிப்பு விவரங்கள், பார்சிலோனா - 941 (672 கோல்கள் & 269 அசிஸ்ட்ஸ்)
ஆர்ஜென்டீனா - 117 (114 கோல்கள் & 62 அசிஸ்ட்ஸ்) பிஎஸ்ஜி - 66 (32 கோல்கள் & 34 அசிஸ்ட்ஸ்) இன்டர் மியாமி - 117 (78 கோல்கள் & 39 அசிஸ்ட்ஸ்).
ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் மெஸ்ஸி இந்த வரலாற்றை நிகழ்த்தியுள்ளார்.
இறுதிப் போட்டி
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |