கொல்கத்தா மைதானத்தில் பாரிய குழப்பம்! உடனடியாக வெளியேறிய மெஸ்ஸி
புதிய இணைப்பு
அர்ஜண்டீனாவின் கால்பந்து அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியாவை வந்தடைந்த நிலையில் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு குழப்பமாக மாறியுள்ளது.
மெஸ்ஸி திட்டமிட்டபடி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு வந்த நிலையில், அவரது வாகனம் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், அவர் வெளியே வந்த சில நிமிடங்களில், பிரபலங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அமைப்பாளர்கள் வருகைத்தந்த நிலையில் சில அனுமதி பெறாத நபர்கள் அவரைச் சுற்றி திரண்டதாலும், திட்டமிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாலும், இவ்வாறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans resort to vandalism at the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.
— ANI (@ANI) December 13, 2025
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible… pic.twitter.com/TOf2KYeFt9
பொதுக்கூட்ட அமைப்பு குறித்து ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா, மெஸ்ஸியின் அதிகாரப்பூர்வ குழுவினர் அல்லாதவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பலமுறை அறிவித்த போதிலும், அந்த கருத்துக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பலர் செல்ஃபி எடுக்கவும், கையெழுத்து வாங்கவும் முயன்ற நிலையில் இதனால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியதோடு, "மெஸ்ஸி, மெஸ்ஸி" என்ற கோஷங்கள் அரங்கில் எதிரொலிக்க, மெஸ்ஸி மைதானத்திற்குள் சிறிது தூரம் மட்டுமே நடந்து பின்னர் திரும்பி சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் வெளியேறியதை அடுத்து, சால்ட் லேக் மைதானத்தில் கோபமடைந்த இரசிகர்கள், போத்தல்களை வீசி சொத்துக்களை சேதப்படுத்தினர்.
#WATCH | Kolkata, West Bengal: Police personnel use mild force to disperse the crowd that had gathered outside the hotel where star footballer Lionel Messi was staying
— ANI (@ANI) December 13, 2025
Angry fans today vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.… pic.twitter.com/u58JR0xNG3
ஏற்பாட்டாளர்கள் மோசமான திட்டமிடல் செய்ததாக குற்றம் சாட்டியதோடு, டிக்கெட்டுகள் மற்றும் பயணத்திற்காக அதிக செலவு செய்தாலும் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
#WATCH | West Bengal: Star footballer Lionel Messi greets his fans at Salt Lake Stadium in Kolkata
— ANI (@ANI) December 13, 2025
A friendly match and a felicitation ceremony will be organised here. #Messi𓃵 #MessiInIndia
(Video Source: DD Sports) pic.twitter.com/ijEsiDMwEg
முதலாம் இணைப்பு
அர்ஜண்டீனாவின் கால்பந்து அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
இந்தியாவுக்கு சென்ற மெஸ்ஸி, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திக்கவுள்ளார்.
அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்ததுடன், அவர் தங்கியுள்ள கொல்கத்தா நகர ஹோட்டலுக்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
70 அடி உருவச்சிலை
இதன் காரணமாக கொல்கத்தா நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது இந்த விஜயம் 'GOAT India Tour 2025' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை வரவேற்கப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 70 அடி உயரமான அவரது உருவச்சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி தனது இந்திய விஜயத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விசேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ரசிகர்களுக்கு வாய்ப்பு
இதேவேளை, கொல்கத்தாவில் இன்று நடைபெறும் அவரை வரவேற்கும் நிகழ்வில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மெஸ்ஸியின் இந்திய விஜயத்தின் போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு ரசிகரிடமிருந்து இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்த தொகை அறவிடப்படுவதுடன், அதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் 35 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்ததாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |