உங்களுக்கு கருமையான உதடா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
பெண்களின் அழகை மெருகேற்றுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
என்ன தான் உதட்டிற்கு செயற்கை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் இயற்கையாகவே உங்க உதடுகள் சிவப்பு நிறத்தில் பட்டு போன்று மென்மையாக காணப்பட்டால் எப்படி இருக்கும்.
ஆனால் நிறைய பேருக்கு சிவப்பு நிற உதடுகள் அமைவதில்லை. பலருக்கு கருப்பாகவே காணப்படும். இவற்றை ஒரு சில இயற்கை முறைகள் மூலம் சரி செய்யலாம்.
தற்போது கருப்பாக அசிங்கமாக இருக்கும் உதடுகளை எப்படி அழகுப்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் உதடுகளில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளை பெற தினமும் இதைச் செய்து வரலாம்.
சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை உங்கள் உதடுகளில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இது உங்கள் உதடுகளை உரிக்கவும், கருமையை ஏற்படுத்தும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவும்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் உங்கள் உதட்டை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவி வந்தால் நல்லது.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பாதாம் எண்ணெயை உதடுகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

