மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மே 6 ஆம் திகதி மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நாளை (03) நள்ளிரவு முதல் முடிவுக்கு வரும் எனவும் மே 03 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதிக் காலமாக கருதப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பிரதேசத்தில் உள்ள உப தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
