சட்டவிரோதமாக மதுபான உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டதா..! வெளியானது விளக்கம்
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தேர்தல் காலத்தில் தமக்கு ஆதரவளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால்(ranil wickremesinghe) இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள்
எனினும் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நிலுவைத் தொகையை செலுத்த இணக்கம்
இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமாக மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதற்கான அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க (anura kumara dissanayake)உத்தரவிட்டிருந்தார் என செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |