இரு நாட்களுக்கு மூடப்படும் மதுபான நிலையங்கள்: கலால் திணைக்களம் உத்தரவு
Vesak Full Moon Poya
Sri Lankan Peoples
By Kiruththikan
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 15) மற்றும் திங்கட்கிழமை (மே 16) நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தன்று (மே 15) மற்றும் வெசாக் தினத்திற்கு மறுநாள் (மே 16) சில்லறை விற்பனைக்காக நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள் அல்லது சில்லறை விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அந்த நாட்களில் உரிமம் பெற்ற வளாகத்தை மூடாத அல்லது உரிம நிபந்தனைகளை மீறும் எந்தவொரு கலால் உரிமம் பெற்ற வளாகங்களுக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த நாட்டிலுள்ள அனைத்து கலால் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்