பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானோர் தொடர்பில் வெளியான தகவல்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த வருடம் ஜுலை வரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தநிலைமை நாட்டில் பயங்கரமான நிலை ஒன்றை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலில் அரசாங்கம் வாக்குறுயளித்திருந்தது.
அமைச்சர் விஜித ஹேரத்தும் செப்டம்பரில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு
ஹிராஜ் வீரரத்தின மற்றும் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் யுடியுப் தொலைகாட்சியில் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் இருவருக்கும் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு பகுதியினருக்கு மாத்திரம் சட்டம் அவசரமாக செயற்படுவதாகவும் சிலருக்கு தாமதம் ஆவதாக தென்படுகிறது.
அரசியல் உரிமைகள்
உதய கம்மம்பிலவுக்கு எதிராக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தி ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரின் உரையாடலில் இனங்களிடையே விரிசலை அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் சொற் பிரயோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகின்றது.
குறித்த ICCPR உடன்படிக்கையில் இருக்கும் பாதகங்களை கருத்தில் கொண்டு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு “ரபாத்” பரிசோதனை மூலம் ஆறு காரணங்களை தெரிவித்துள்ளது.
ICCPR உடன்படிக்கை முன்கொண்டு செல்வதென்றால் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
