உலகிலேயே அதிக தீவுகளை கொண்ட நாடுகளைப் பற்றி தெரியுமா!
உலகில் மொத்தமாக 9 லட்சம் தீவுகள் காணப்படுகின்றன, இலங்கையில் கூட நயினாதீவு,நெடுந்தீவு,புங்குடுதீவு, அனலைதீவு என சில தீவுகள் உள்ளன.
இதே போல உலகின் பெரும்பாலான நாடுகள் பல தீவுகளை கொண்டுள்ளன, லட்சக்கணக்கில் தொடங்கி ஆயிரக்கணக்கான தீவுகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றாற்போல் தீவுகளின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது.
அந்த வரிசையில் உலகில் அதிக தீவுகளைக் கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் நாடு 2,67,570 தீவுகளைக் கொண்டுள்ளது அது எந்த நாடு தெரியுமா?
சுவீடன்
உலகிலுள்ள அழகான நாடுகளில் ஒன்றான சுவீடனில் மொத்தமாக 267,570 தீவுகள் உள்ளன, அவற்றில் 96,000 மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது என்றும் மற்றும் 80,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர் ஆனால் பெயரிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுவிடனில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவாக பால்டிக் கடலில் அமைந்துள்ள கோட்லேண்ட் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் முக்கிய தீவுகளாக ஸ்வீடனுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒலாண்ட் மற்றும் பின்லாந்தின் தன்னாட்சிப் பகுதியான ஆலண்ட் தீவுகள் ஆகியவையும் இதில் அடங்குகின்றது.
நோர்வே
நோர்வே தீவுகள் ஆர்க்டிக்கின் பனிப்பாறைகள் மற்றும் மலைகள் முதல் மிதமான பகுதிகளின் காடுகள் மற்றும் ஏரிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளுக்கு தாயகமாக உள்ளன.
துருவக் கரடிகள், வால்ரஸ்கள் மற்றும் கலைமான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் இருப்பிடமாகவும் இந்தத் தீவுகள் உள்ளன.
மொத்தமாக நார்வேயில் 239,057 தீவுகள் உள்ளன, அவற்றில் 60,000 தீவுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் மொத்தமாக 170,000 தீவுகள் உள்ளன, அவற்றில் 80,000 மக்கள் வசிக்கின்றனர்.
பின்லாந்து
பின்லாந்தில் உள்ள தீவுகளில் மிகப்பெரிய தீவின் பெயர் ஆலண்ட் ஆகும், இது பின்லாந்தின் தன்னாட்சி பகுதியாக உள்ளது.
பின்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள பின்லாந்து ப்ரோப்பர் மற்றும் பால்டிக் கடலில் அமைந்துள்ள ஆலண்ட் தீவுகள் ஆகியவை பிற முக்கிய தீவுகளாக கருதப்படுகிறது.
கனடா
உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளில் ஒன்றான கனடாவில் 50,000 தீவுகள் உள்ளன, அவற்றில் 52 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
கனடாவில் உள்ள தீவுகளில் ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பாஃபின் தீவு மிகப்பெரிய தீவு ஆகும். மற்ற முக்கிய தீவுகளில் நியூஃபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் வான்கூவர் தீவு ஆகியவை அடங்கும்.
தீவுகள் ஆர்க்டிக்கின் பனிப்பாறைகள் மற்றும் மலைகள் முதல் மிதமான பகுதிகளின் காடுகள் மற்றும் ஏரிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளில் அமைந்துள்ளன.
அமெரிக்கா
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவில் மொத்தமாக 18,000 தீவுகள் உள்ளன, அவற்றில் 50 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுதான் மிகப்பெரிய தீவு. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் இணைக்கப்படாத பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவை மற்ற முக்கிய தீவுகளில் அடங்குகின்றது.
இந்தோனேசியா
தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் மொத்தம் 17,508 தீவுகள் உள்ளன.
இந்தோனேசியாவில் தீவுகளில் பல அழகான சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன, இந்தோனேஷியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளின் தாயகமாக உள்ளது.
மேலும் அதன் தீவுகள் கடற்கரைகள் மற்றும் மழைக்காடுகள் முதல் எரிமலைகள் மற்றும் பழங்கால கோவில்கள் வரை பல்வேறு சுற்றுலா இடங்களை இங்கு காணக்கூடியவாறு உள்ளமை சிறப்பம்சமாகும்.
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் மொத்தமாக 8,200 தீவுகள் உள்ளன, அவற்றில் 300 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீவின் பெயர் தஸ்மேனியா ஆகும், இது அந்த நாட்டின் தெற்கே அமைந்துள்ளது.
மற்ற முக்கிய தீவுகளில் கங்காரு தீவு, ஃப்ரேசர் தீவு மற்றும் மெல்வில் தீவு ஆகியவை அடங்குகின்றது.
பிலிப்பைன்ஸ்
மற்றொரு தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் 7,641 தீவுகள் உள்ளன, அவற்றில் 2,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
மணிலாவின் தலைநகரான லுசோன் தீவு மிகப்பெரிய தீவு ஆகும், மற்ற முக்கிய தீவுகளில் மிண்டானாவ், விசாயாஸ் மற்றும் பலவான் ஆகியவை அடங்குகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
