லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவித்தல்!!
நாளைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 முதல் விநியோகம் இடைநிறுத்தம்
கடந்த 24 ஆம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், 3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
