லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
மாத இறுதியளவில் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன. குறிப்பாக மேல் மாகாணத்தில் எரிவாயுவின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களுக்கு லிட்ரோ எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
விநியோகம் இடைநிறுத்தம்
கையிருப்பு தீர்ந்தமையால் லிட்ரோ நிறுவனம் தமது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சில நாட்களுக்கு இடைநிறுத்தியிருந்தது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது லிட்ரோ நிறுவனம் மீண்டும் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.