லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு!
கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜூலை 9 எரிவாயு கப்பல் வருகை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "ஜூலை 9 ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளது இதனையடுத்து ஜூலை 11 ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பமாகும்.
கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள 140,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பின் நாளாந்தம் மொத்தம் 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும்.
ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும், அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும்", எனக் குறிப்பிட்டார்.