விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Kanna
நாளை விநியோகம் இல்லை
நாளை(04) எரிவாயு சிலிண்டர் விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.
வார இறுதியில் மற்றுமொரு எரிவாயு கப்பல்
எவ்வாறாயினும், 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் மீளவும் முன்னெடுக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று 16,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் லிட்ரோ நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று நாட்களாக லிட்ரோ நிறுவனம் சீரான முறையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்