நள்ளிரவு முதல் குறைகிறது எரிவாயு விலை
Litro Gas
Laugfs Gas Price
By Vanan
சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதேபோல், 2.3 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி